யாருடைய ஆட்சியாக இருந்தால் என்ன? தமிழகத்திற்கு இதே நிலைதான்...இபிஎஸ் குற்றச்சாட்டு!
eps slam central governement
மத்திய அரசு தமிழக அரசு கேட்கும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே வழங்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் தாகத்தை தீர்க்கும் விதமாக, சேலத்தில் அதிமுக. சார்பில் 4 இடங்களில் நீர், மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழக அரசு கேட்கும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே வழங்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இதே நிலைதான். மத்திய அரசு அப்போதும் கேட்கும் நிதியை ஒதுக்கியதில்லை.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்த போதும் இதே நிலைதான். அப்போதும் நிதியை குறைத்து தான் கொடுத்தார்கள். தி.மு.க. மத்தியில் கூட்டணியில் இடம்பெற்று அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிதி கிடைக்கவில்லை. மேலும் அவர் கூறுகையில், குடிமராமத்து என்ற அற்புதமான திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவைக்கப்பட்டது.
அதேபோல்,அ.தி.மு.க ஆட்சியின் போது 14000 ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரப்பட்டன. தமிழகம் போதைப்பொருளால் மிக மோசமான அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என்று கூறினார்.
English Summary
eps slam central governement