ஓபிஎஸ் நிலை தான் பாஜகவுக்கு..!! எச்சரிக்கும் இபிஎஸ் தரப்பு..!! பின்னணியில் இருக்கும் 3 மாஜி அமைச்சர்கள்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக நேரடியாக தலையிடுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சி.வி சண்முகத்தின் இத்தகைய பேச்சு அதிமுக பாஜக கூட்டணியில் மட்டுமல்லாமல் திமுக கூட்டணியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிவி சண்முகத்தின் பேச்சு கலை பொறுப்பெடுத்த வேண்டாம் என அதிமுக தரப்பு கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தி இருந்தாலும் ஒரு சந்தேக கண்ணோடு பார்க்கின்றனர். 

இந்த நிலையில் அதிமுக தலைமையில் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது சி.வி சண்முகத்தின் பேச்சு உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சி.வி சண்முகத்திற்கு பாஜக தரப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக நேரடியாக ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக இருப்பதால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் பாஜக தனித்து போட்டியிட தயாரா என சவால் விடுத்த நிலையில் தற்பொழுது சி.வி சண்முகத்தின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவான நிலையில் நீடித்தால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது போல் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. முன்னாள் அமைச்சர்களை வைத்து பாஜகவிற்கு இபிஎஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என இபிஎஸ் அறிவித்திருந்த நிலையில் அதிமுகவின் 3 முன்னாள் அமைச்சர்களின் பேச்சு அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS warned BJP that happened to OPS will come


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->