பரதேசி சீமான் என பெயர் வைத்துக்கொள்ளலாம்... பரபரப்பு கிளப்பிய ஈவிகேஎஸ் இளங்கோவன்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது பார்வையில்லாத ஒருவர் கண்ணாயிரம் எனும் பெயர் வைத்துக் கொள்வது போல் ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் பரதேசி சீமான் என பெயர் வைத்துக் கொள்வார் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க போன்ற கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிடும் நிலையில் சீமான் கட்சி மற்றும் தனித்து போட்டியிடுகிறது. 

இருப்பினும் கடந்த 15 ஆண்டுகளாக சீமான் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெற முடியாமல் இருக்கின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பரதேசி போல ஊரைச் சுற்றி கொண்டிருப்பவர் தான் சீமான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். 

பல்வேறு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை ஈழத் தமிழர்களை கொன்ற கட்சி என சீமான் விமர்சித்து வந்த நிலையில் இளங்கோவன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan Criticized Seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->