கர்நாடக மாநிலத்திற்கு தேசிய கட்சிகளால் எந்த பயனும் இல்லை - குமாரசாமி பரபரப்பு பேச்சு.!
ex chief minister kumarasamy speach for election campaign in karnataga
கர்நாடக மாநிலத்திற்கு தேசிய கட்சிகளால் எந்த பயனும் இல்லை - குமாரசாமி பரபரப்பு பேச்சு.!
கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் காலம் சூடு பிடிக்காத தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், துமகூரு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- "துமகூரு மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. அதில், 10 தொகுதிகளில் நிச்சயம் ஜனதாதளம் வெற்றி பெறும். நமது கட்சி மீது இரண்டு தேசிய கட்சிகளும், பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஜனதாதளம் கட்சிக்கு ஓட்டுப்போட்டால் காங்கிரசுக்கு போடுவது என்று பாஜக தலைவர்களும், பாஜகவுக்கு வாக்களித்ததாக ஆகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர்களும் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய யாரும் தேவையில்லை. கட்சி தொண்டர்களே போதும். தேசிய காட்சிகள் இரண்டும் ஊழல் கட்சிகள். ஜனதாதளம் தான் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான கட்சி.
தேர்தலுக்கு முன்பு வரும் கருத்து கணிப்பு முடிவுகளை நமது கட்சியினர் நம்ப வேண்டாம். இந்த முறை நமது கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி. நமது கட்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
நமது கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து. கர்நாடக மாநிலத்திற்கு தேசிய கட்சிகளால் எந்த பயனும் இல்லை. இதனை மக்கள் புரிந்து கொண்டு ஜனதாதளம் கட்சியை நிச்சயமாக ஆதரிப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
ex chief minister kumarasamy speach for election campaign in karnataga