திமுக சுப்புலட்சுமி ஜெகதீசனை தொடர்ந்து விலகவுள்ள முக்கிய புள்ளிகள்! - Ex மினிஸ்டர் தகவல்.!
Ex Minister RB udhayakumar about subbulakshmi jegadeesan leaving From DMK
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "திமுக கட்சியில் ஜனநாயகமே இல்லை. எனவே, தான் அதிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேற இருக்கிறார்.
சுப்புலட்சுமியை தொடர்ந்து திமுகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள் வெளியேற இருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்த போலீஸ் டிபார்ட்மெண்ட் சிறந்த காவல்துறைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. தற்போது இருக்கும் சட்ட ஒழுங்கு நாடே கைகொட்டி சிரிக்கும் விதத்தில் இருக்கிறது.
திமுக அரசு குறித்து விமர்சனம் செய்தால் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கோம். அதிமுக மனித புனிதரால் துவங்கப்பட்ட தெய்வ சக்தி பெற்ற ஒரு இயக்கம்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஆன்மா தான் எடப்பாடியாரை வழி நடத்துகிறது. திமுகவிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அது எடப்பாடியாரால் மட்டும் தான் முடியும்.
மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு சுமையை அதிகரிக்கக் கூடாது என்று எடப்பாடி கவனத்துடன் கடந்த ஆட்சியில் செயல்பட்டார். அடுத்தது சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தல் எது வந்தாலும் இரட்டை இலை தான் ஜெயிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ex Minister RB udhayakumar about subbulakshmi jegadeesan leaving From DMK