பழங்குடியினர் நலத்திட்டம் தொடர்பான ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் - அமலாக்கத்துறை நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


கடந்த மே 21ம் தேதி பெங்களூரு மாநகராட்சியின் கணக்கு கண்காணிப்பாளரான சந்திரசேகரன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலையின் போது அவர் மாநகராட்சியின் பல்வேறு அதிகாரிகள் மாநகராட்சி வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்து வருவதாக ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 

அதன்படி பெங்களூரு கார்ப்பரேஷன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 187 கோடி சட்ட விரோதமாக வேறு வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 88.62 கோடி சட்ட விரோதமாக மாற்றப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பி. நாகேந்திரன் கடந்த ஜூன் 6ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே இந்த பண மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாகேந்திரனின் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மத்திய புலனாய்வு முகமையும் இந்த விவகாரம் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்த பண மோசடி தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை, முன்னாள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பி. நாகேந்திரனை தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை கர்நாடக பாஜக வரவேற்றுள்ளதோடு, மாநில வரலாற்றில் இது மிகப்பெரிய ஊழலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Minister Taken Into ED Custody in Money Laundering Probe in Tribe Welfare


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->