தமிழக மீனவர் உயிரிழப்பு சம்பவம் எதிரொலி : டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரியை அழைத்துக் கண்டித்த மத்திய அரசு..!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை ரோந்துப் படகு மோதியதில் கடலிலேயே உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான ரோந்துப் படகும், இந்திய மீனவர்களின் படகும் இன்று அதிகாலை மோதியதாகத் தெரிய வந்துள்ளது. 

மேலும் இதில் படகில் இருந்த 4 இந்திய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் மாயமானதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் மற்ற இருவரை இலங்கைக் கடற்படையினர் காங்கேசன்துறை கப்பற்படை தளத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்குச் சென்று கைதான மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரியை இன்று வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து இந்திய மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய அரசின் அதிர்ச்சியையும், கண்டனத்தையும், வேதனையையும் தெரிவித்துள்ளோம். 

மேலும் கொழும்பில் உள்ள இந்திய தூதர் இலங்கை அரசிடம் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீனவர் பிரச்சினைகளை நியாயமாக, மனிதாபிமான முறையில் தான் இலங்கை அரசு கையாள வேண்டும்  என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

External Affair Ministry Condemned Srilankan Embassy Officer in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->