தமிழகம் முழுவதும் ஒன்றை லட்சம் பேர் மீது வழக்கு பதிந்த போலீசார்.! மக்களே உஷார்., சிக்கினால் வழக்கு நிச்சயம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உருமாறிய கொரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொருத்தவரை வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இன்று (ஜனவரி 16) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ள முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முகவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியையும்  போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து, 3 கோடியே 44 லட்சம் ரூபாயை அபராதமாக போலீசார் வசூல் செய்துள்ளனர்.

மேலும், கடந்த 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முககவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 1.64 லட்சம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் முகக்கவசம் அணியாத 5469 பேரிடம் இருந்து, 10 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதம் வசூலித்து உள்ளனர். 

சமூக இடைவெளியை கடைபிடிக்காது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 13 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face mask issue tn report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->