பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கைது?...நிதி முறைகேட்டில் அமலாக்கத்துறை வசம் சிக்கியது எப்படி?
Famous ex Indian cricket captain arrested how did the enforcement department get caught in financial irregularities
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன், 1984 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அசாருதீன் தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
தொடர்ந்து 3 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், சூதாட்டத்தில் சிக்கியதை அடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனால், நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.மேலும், இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து இவர் இன்று ஆஜராவதாக தெரிவித்து அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி இன்று ஐதராபாத் பதே மைதான் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அசாருதீன் நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் சோதனை நடத்தியதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை என்று கூறப்படும் நிலையில், முகமது அசாருதீன் பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous ex Indian cricket captain arrested how did the enforcement department get caught in financial irregularities