விவசாயிகளுக்கான ₹.13.8 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்.! - Seithipunal
Seithipunal


விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிக்கடன் ₹.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் புதிய சட்டப்பேரவை கட்டும் பணி துவங்கும். 

2022 இல் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய 13.8 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிடுகிறது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும். நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

விழா கால துணி மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் படி மூடப்பட்டுள்ள அரசின் மூன்று மில்கள் செயல்படுத்தப்படும். 70 முதல் 80 வயதுள்ள முதியவர்களுக்கு உதவித்தொகை 3000 ஆக உயர்த்தப்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். மற்றும் திருமண உதவித்தொகை, மகளிர் மகப்பேறு உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதாக  முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers Loan discounted In pudhucherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->