நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் புனித செங்கோலை மீட்டு நிறுவிய நாள்..ஆளுநர் ரவி அறிக்கை..! - Seithipunal
Seithipunal



புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது தமிழகத்தின் செங்கோலை அங்கு நிறுவினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இந்நிகழ்வு நடந்து ஓராண்டாகியுள்ளது. இதையடுத்து தமிழக கவர்னர் ஆர். என். ரவி தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, "பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தின் புனித செங்கோலை மீட்டெடுத்து நமது புதிய நாடாளுமன்றத்தில் நிறுவி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிகழ்வை நமது தேசம் தற்போது பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.

தமிழர் பெருமையின் அடையாளமாக இருந்தது தான் இந்த புனித செங்கோல். தமிழகத்தை ஆளும் கட்சிகள் நீண்ட நெடுங்காலமாக இந்த தமிழரின் பெருமையான அடையாளத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர். எனவே இந்த புனித செங்கோலை மீண்டும் உயரிய இடத்தில் நிறுவ பிரதமர் மோடி முடிவு செய்தார்.

அதன்படி தமிழகத்தின் இந்த புனித செங்கோலை நாட்டின் மிகவும் உயரிய பீடமான புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவினார் பிரதமர் மோடி. இதற்காக தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்" என்று தனது அறிக்கையில் ஆளுநர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Year of Tamilnadus Holy Scepter in New Parliament Building


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->