கட்சியின் எதிர்கால நலன்கருதி ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலகவேண்டும்.. போஸ்டரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியின் எதிர்காலம் கருதி பதவி விலக வேண்டும் என வெற்றிவெல் என்பவர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே காவேரிப்பட்டினம் ஒன்றியம் சார்பில் வெற்றிவேல் என்பவர் போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு சசிகலாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவை சூழ்நிலையால் கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.

இவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்ட மன்ற தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்டது. மேலும் புதுவையில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது என ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்திலும் கட்சியை காலி செய்ய சதி நடைபெறுவதாகவும் 50 லட்சம் தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனர்‌. மீதமுள்ள 50 லட்சம் பேரும் நடுநிலையோடு இருப்பதாகவும் ஒட்டப்பட்டுள்ளது.

சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்த வேண்டும் என போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரியில் அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For the future welfare of the party OPS and EPS should resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->