திமுக கூடாரத்தில் கை வைத்த பாஜக! கலைஞர் தொலைக்காட்சியின் சீக்ரெட் அமித்ஷா கையில்!
former CEO of KalainarTV Rameshprabha joins BJP
தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்துள்ளார். சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 வது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்றார். பின்னர் இன்று பிற்பகலில் தியாகராயில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் கலைஞர் டிவியின் முன்னாள் தலைமை நிர்வாகி ரமேஷ் பிரபா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்து வந்தார். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட பொழுது சன் டிவியில் இருந்து விலகி கலைஞர் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பும் ஏற்று நடத்தி வந்தார். வெறும் 11 மாதத்தில் கலைஞர் டிவியின் தலைமை பதவியில் இருந்து ரமேஷ் பிரகா நீக்கப்பட்டார்.
இவர் தற்பொழுது கல்வி ஆலோசகராகவும், கல்வி வழிகாட்டல் என்ற நிகழ்ச்சியையும், கேலக்ஸி மேலாண்மை கல்லூரியையும் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை விளக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மத்திய அரசுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வருகை புரிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் முக்கிய பொறுப்பில் இருந்த ரமேஷ் பிரபா தற்பொழுது பாஜகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இருப்பினும் ரமேஷ் பிரபா இணைவது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
English Summary
former CEO of KalainarTV Rameshprabha joins BJP