முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் காலமானார் - செல்வப்பெருந்தகை இரங்கல்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் முத்து குட்டி உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு வி. முத்து குட்டி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். சிறந்த பண்பாளர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் மிகவும் பாராட்டிற்குரியது. முத்து குட்டி அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பாகும்.

திரு முத்து குட்டி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former congress leader passed away selvaperundagai condolence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->