#BigBreaking :: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. 5வது கட்சியாக அதிமுகவில் ஐக்கியம்...!! இபிஎஸ் தலைமையை ஏற்றார் மதுரை சரவணன்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் டாக்டர் சரவணன்  பாஜகவில் இணைவதற்கு முன்பு திமுக, தேமுதிக, மதிமுக, பாஜகவுக்கு போய்விட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். கடந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவில் சீட் கொடுக்காததால் மீண்டும் பாஜகவில் சேர்ந்து மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். டாக்டர் சரவணன் தேர்தலில் தோல்வியடைந்ததால் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினார்கள். அன்று இரவே அமைச்சரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த சரவணன் பின்னர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு திமுகவில் சேர அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரை திமுகவில் சேர்க்க மதுரை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேரும் சம்மதிக்கவில்லை. திமுகவில் எம்எல்ஏ ஆன பிறகு பாஜகவில் இணைந்து திமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்த சரவணனை மீண்டும் திமுகவில் சேர்க்கவே கூடாது என மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.

அதன் பிறகு தமிழக முதல்வரின் உறவினர் மூலம் திமுகவில் சேரவும் முயன்று அதும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து டாக்டர் சரவணன் மீண்டும் பாஜகவிலேயே சேர்ந்துவிடலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுகவில் டாக்டர் சரவணன் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் திமுக எம்எல்ஏ அதிமுகவில் இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former DMK MLA Madurai Saravanan joined AIADMK


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->