எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் - செல்லூர் ராஜூ பேட்டி! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்‌.

மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததாவது,

"ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டு உள்ளார். இதன்படி எனது கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி உதவி என ரூ.1 லட்சம் வரை கிடைத்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு, தி.மு.க. அரசு புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் தான் கிடைக்கிறது. மதுரை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 538 மாணவிகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள்". என்று தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former minister Sellur Raju yesterday interview to media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->