அரசியலில் இருந்து இன்றுடன் விடைபெறுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்‌ .!! - Seithipunal
Seithipunal


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இன்றுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

காங்கிரஸ் கட்சியில் நீண்ட கலமாக பயணம் செய்த மன்மோகன் சிங் 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 

மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த மன்மோகன் சிங் காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாநிலங்கள் அவையின் 49 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

அந்த வகையில் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் இன்றுடன் நிறைவடைகிறது. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் நிதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். 

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former prime minister Manmohan Singh retired from politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->