பாஜகவுக்கு தாவிய முன்னாள் முதல்வரின் மனைவி..! காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.!!
Former Punjab CM Amarinder Singh wife Preneet Kaur joins BJP in Delhi
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பியும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் இன்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பிரதமர் மோடியின் தலைமையில் எனது தொகுதி, எனது மாநிலம் மற்றும் நாட்டிற்காக நான் பாடுபடுவேன்.
நான் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நன்றாக பணியாற்றினேன். தற்போது பாஜகவுடன் இணைந்து மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் இவர் பாஜக சார்பில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
Former Punjab CM Amarinder Singh wife Preneet Kaur joins BJP in Delhi