JDS-க்கு கல்தா.. காங்கிரசுக்கு தாவிய தமிழ்நாடு முன்னாள் டிஜிபி.!!
Former tamilnadu DGP joined in congress from JDS
தமிழ்நாடு காவல்துறை தலைவராக இருந்த கருணாசாகர் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி அப்போதைய பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கருணாசாகர் ராஷ்ட்ரிய ஜனதா தரும் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் என நாடு முழுவதும் பல கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைத்துள்ள நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து முன்னாள் டிஜிபி கருணா சாகர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகிய தமிழக முன்னாள் டிஜிபி கருணாசாகர் தனது மனைவி அஞ்சுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில் கருணா சாகரின் இந்த முடிவு பீகார் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Former tamilnadu DGP joined in congress from JDS