ஹெச். ராஜாவிற்கு விருது அளிக்க பிரதமருக்கு கோரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்.! - Seithipunal
Seithipunal


ஹெச்.​ ராஜாவிற்கு விருது அளிக்க பிரதமருக்கு கோரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்.!

பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்க உள்ளதாக அறிவித்து தனது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழக பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், ‘’ஹெச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும், தேசத்திற்கும், கட்சிக்கும் நிறைய சேவை செய்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அவர் விருதுக்குத் தகுதியானவர். 

அதனால் ஹெச்.ராஜா அண்ணாவிற்கு பத்மஸ்ரீ அல்லது பத்மபூஷன் விருது அளித்து, அவரை கௌரவிக்க வேண்டும் என்று மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

ஹெச்.ராஜா அண்ணா, உங்கள் தேசத்திற்கான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராமின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gayathri raguram request to pm modi for given to award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->