திருமாவளவன் டிவிட்டை ரீடிவிட் செய்த நடிகை.! இது நியாயமா? என்று கேள்வி.! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பிருமண திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

"சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்து இருக்கிறேன். நாளை காலை நமது கட்சியின் துணை அமைப்பான கிறிஸ்துவ சமூக நீதிப் பேரவை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி சென்னை கெல்லிஸ் அருகே நடைபெறுகிறது.

இந்த கிறிஸ்மஸ் பெருவிழா காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் மாலை நான் பங்கேற்கிறேன். 

தந்தை பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களும், இன்னும் பல்வேறு இடங்களை சேர்ந்த பாதிரிமார்களும்  இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை தலைவர் தலைமை வகிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை ரீடிவிட் செய்து, 'உங்கள் தொகுதியில் இந்துக்களின் விழாவுக்கு தடை விதித்துள்ளார்களே? நீங்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை சென்னையில் பெரும் கூட்டத்துடன் கொண்டாட போய்விட்டேர்களா? என்று, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raguramm RETWEET THIRUMA POST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->