"4 ஆடு தான் இருக்குன்னு சொல்லுவாரு".. பல கோடிகளை கொடுத்துள்ளனர்... விட்றாதீங்க..! -காயத்ரி ரகுராம்..! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாக பல மாதங்களாக கூறிவந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் திமுகவினரின் ஊழல் பட்டியலுக்கு பதிலாக சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவினரின் சொத்து பட்டியல் பெரும்பாலானோர் அறிந்த நிலையில் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. திமுகவினருக்கு எதிராக அண்ணாமலை எய்த அம்பு தற்பொழுது அவர் பக்கம் திரும்பி உள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவை நீக்க வேண்டும் என்றும், வருமானவரித்துறை உள்ளிட்ட அதிகாரியிடம் திமுகவின் சொத்துக்கள், கடன் விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை புகார் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும்திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டதோடு, அந்த நோட்டீஸில் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக, அண்ணாமலையை விட்டாதிங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்..அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார். இந்த பீம்பாய்க்கு பல நண்பர்கள் பல கோடிகளை கொடுத்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமின் பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri tweet on RS Bharthi notice to annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->