அண்ணாமலை ₹500 கோடி கொடுப்பாராம்.. அமெரிக்கா தப்பிச்செல்ல திட்டமா..? கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்..!! - Seithipunal
Seithipunal


திமுகவினர் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை பாஜக கட்சி அலுவலகமான கமலாலயத்தில் வெளியிட்டார். அதில் அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், ஏ.வ வேலு, மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இவர்களுக்கு உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என விளக்கம் அளித்தார். மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுகவின் மீது வைத்ததற்காக ₹500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ் பாரதி முடிந்தால் வழக்கு தொடரட்டும் அதை சந்திக்க தயார் எனவும் ஆருத்ரா நிறுவனத்திடம் ₹84 கோடி நான் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது ஆர்.எஸ் பாரதி சுமத்தியுள்ளார். இதை எதிர்த்து ₹501 கோடி இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன் என இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு அண்ணாமலையை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்ததோடு கேள்வியும் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ₹500 கோடியை PM Cares நிதிக்கு கொடுப்பாராம். இது என்ன நியாயம்? இது என்ன போங்கு? PM Cares நிதியை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேலி செய்கிறது & மோசடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள்.

இப்போ அண்ணாமலை PM Cares நிதியை தேவையில்லாமல் இழுத்து வருகிறார். பித்தலாட்டம் அண்ணாமலை. ஆருத்ரா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் கேட்டீர்கள்.. பிறகு எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலை, பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் பித்தலாட்டம் முட்டாள்தனத்தை காப்பாற்றுவது பிரதமரின் வேலையா?

பிஜேபியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை விருப்பப்படி பயன்படுத்தி பிரதமர் பெயர் விருப்பப்படி பயன்படுத்தி தப்பிப்பதா? பாஜக தேசிய கட்சி என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். அவர் தனது தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது" என பதிவிட்டுள்ளார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பல பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகி வரும் நிலையில் அண்ணாமலை அமெரிக்க தப்பி செலல திட்டமா..? என காயத்ரி ரகுராம் கேள்விகள் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayatri Raghuram criticized Annamalai statement on DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->