உத்திரப்பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் இந்த கட்சி காணாமல் போகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை - G.K.நாகராஜ் பகீர்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மீது காட்டும் அக்கறை, தமிழகத்தின் மீது ஏன் இல்லை? என்று தமிழக காங்கிரசுக்கு பாஜகவின்  G.K.நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென கேரளா காங்கிரஸ் போராடுகிறது. தேனி,விருதுநகர், சிவகங்கை,மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் முல்லைப்பெரியாறு அணை.

இந்த அணையால் கேரளாவில் ஒரு ஏக்கர் நிலம் கூட பாசனவசதி பெறுவதில்லை. அரபிக்கடலில் கலந்து வீணாகிறது.

முல்லைப் பெரியாறு அணையை 152 அடி நீர்மட்டம் உயர்த்த கேரளாவில் பேபி அணையை வலுப்படுத்த  போராட தோன்றவில்லை தமிழக காங்கிரசுக்கு.

கேரள அமைச்சர் முல்லைப்பெரியாறு அணையின் நீரை வெளியேற்றி நம் உரிமையை பறித்த போது வாய்மூடி மௌனம் காத்தது தமிழக காங்கிரஸ்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வாழ்வாதாரமாகவும்,உயிராதாரமாகவும்   இருக்கும் நீராதாரம் காங்கிரசரால்

தடுக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுவதில்லை தமிழக காங்கிரஸ். ஆனால் பஞ்சாப் காங்கிரசுக்காக பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது மாநில அரசு செய்த பாதுகாப்பு குளறுபடிக்காக சப்பைக்கட்டு கட்டுகிறது தமிழக காங்கிரஸ்.

பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் அரசு காரணம் என்று தெரிந்தும், உண்மையை திசைதிருப்ப  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வெற்று அரசியல் செய்கிறது தமிழ்நாட்டு காங்கிரஸ்.

இவர்களுக்கு தேசத்தைப்பற்றியும் கவலையில்லை, தமிழ்நாட்டைப்பற்றியும் கவலையில்லை. இவர்கள் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

உத்திரப்பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் காங்கிரஸ் காணாமல் போகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை" என்று பாஜகவின்  G.K.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Nagaraj Say About TN Congress In Mullai Periyaru Dam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->