கஜகஸ்தானில் பனிப்புயல் தாக்கியதில் 100 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து..! - Seithipunal
Seithipunal


கஜகஸ்தான் நாட்டில் அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலையில் வாகனங்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

அந்நாட்டின் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலையும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.

அக்மோலா பிராந்தியத்தில் உள்ள கோகம், கராடல் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில்  இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சாலையில் குறுக்கும் நெடுக்குமாக கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு, போலீசார் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசமான வானிலை குறித்து அந்நாட்டு அவசரகால சேவைகள் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சாலைவழி பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 vehicles pile up in Kazakhstan due to snowstorm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->