பிரதமர் மோடியை சந்தித்த செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி..! x தளத்தில் மோடி புகழாரம்.. !
Chess champion Koneru Humpy meets PM Modi
இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி பிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதனைப் பாராட்டும் விதமாக பிரதமர் மோடி கொனேரு ஹம்பியை தனது இல்லத்துக்கு வரவழைத்து வாழ்த்துத் தெரிவித்துளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி 02-வது இடத்தில் உள்ளார்
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமரை கோனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தது தனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவருடைய x தளத்தில் பதிவிட்டுளார். அதில், நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது ஒரு நம்ப முடியாத மரியாதை மற்றும் என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம். உத்வேகம், ஊக்கம் நிறைந்த இந்த அனுபவம் உண்மையிலேயே மறக்க முடியாதது. இந்த அற்புதமான தருணத்திற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு, மறுப்பதிவிட்டு, கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கோனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு விளையாட்டு சின்னமாகவும், ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தின் உதாரணமாகவும் இருக்கிறார்.அவருடைய கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெளிவாகத் தெரிகிறது.அவர் இந்தியாவிற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chess champion Koneru Humpy meets PM Modi