தமிழக விவசாயிகளுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை வைத்து ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கும் பயிர், ஆதார விலை, இழப்பீடு, மானியம், குளிர்பதன கிடங்கு, பாரம்பரிய நெல் ரகம் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கான ஆதாரவிலை 2,500 ரூபாயும், கரும்புக்கு 4,000 ரூபாயும் கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அம்சங்கள் இடம் பெற வேண்டும். டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக முழு மானியத்துடன் இயற்கை உரங்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கிட வழிவகை செய்திட வேண்டும். பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானாவாரி பயிர்களுக்கு ஆதார விலையை உறுதிப்படுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து விவசாயிகள் பயிர் செய்வதற்காக விவசாயிகள் கொண்ட குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும்.

மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காய்கறி, பழங்கள், பூ ஆகியவை பயிரிடப்பட்டு சந்தைக்கு வருவதால் மாவட்டந்தோறும் குளிர்பதன கிடங்கு அமைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் நீர் வரத்து வாரிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கருவேலஞ்செடிகளை அகற்றிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

வறட்சியான மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கிட வேண்டும். ரசாயன உரங்களின் விலையேற்றத்தால் மத்திய அரசு மானியம் வழங்குவது போல் தமிழக அரசும் மானியம் வழங்கிட வேண்டும்.

கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனங்களை வழங்கிட வேண்டும்.
எனவே தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கும் பயிர், ஆதார விலை, இழப்பீடு, மானியம், குளிர்பதன கிடங்கு, பாரம்பரிய நெல் ரகம் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan statement on mar 15


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->