பாஜக - தமாகா இழுபறி.. கறார் காட்டும் அண்ணாமலை.!! அதிருப்தியில் ஜி‌.கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமை தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் வேலூர் தொகுதி புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை டி நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் 4 தொகுதிகள் கேட்ட நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஜி.கே வாசன் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிவுராமல் நிறைவடைந்துள்ளது. மற்ற கட்சிகளுடன் பாஜக தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தை நடத்தி முடித்த பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடன் என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gkvasan dissatisfied with BJP alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->