#BREAKING : கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைகின்றனர். - Seithipunal
Seithipunal


கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

 இந்த நிலையில், கோவா காங்கிரசில் மொத்தமுள்ள 10 எம்.எல்.ஏ.க்களில் இன்று 8 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை இன்று சந்தித்தனர். 

கோவா முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் உள்பட 8 எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவாவில் மொத்தமுள்ள 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் பாஜகவில் இணையும் பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 2 ஆக குறையும். இந்த சம்பவம் கோவா அரசியல் மட்டுமின்றி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goa 8 mla join bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->