#கோவா || இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் - மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பிரமோத் சாவந்த் வெளியிட்ட முதல் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இரண்டாவது முறையாக கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவருடன் சேர்ந்து எட்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இதற்கிடையே, இந்த புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டமும் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த பின்னர்,  பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில் அம்முடிவுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். 

இப்பதிவில், புதிய நிதியாண்டு முதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
கோவா மாநிலத்தில்: ஆட்சிக்கு வந்தால் இலவசமாக ஆண்டுக்கு  மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று, சட்ட சபைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். 

இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பிரமோத் சாவந்த் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மீண்டும் இரும்புத் தாது சுரங்க தொழிலை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப் படுதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goa cm announce free cylinder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->