அரசு தீர்வு கொடுக்குமா? தர்பூசணியில் ரசாயனம்,நெல் மூட்டைகள் நனைதல் போன்றவை விவசாயிகளுக்கு வேதனை தான்...! - பிரேமலதா விஜயகாந்த்
government provide solution Chemicals watermelons wetting paddy bundles pain farmers Premalatha Vijayakanth
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது,"விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது.

மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம்.
மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்கு இதுபோன்ற வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, இதனை விவசாயிகளுக்காக கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
English Summary
government provide solution Chemicals watermelons wetting paddy bundles pain farmers Premalatha Vijayakanth