பொன்முடி நிரபராதியா..? அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைத்த ஆளுநர்.!! - Seithipunal
Seithipunal


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி பொன்முடி தனது அமைச்சர் பதவியும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். 

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் அறிவித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பினார். 

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைத்ததோடு ஒரு மாதத்திற்குள் இந்த வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது ‌ 

உச்ச நீதிமன்றம் தண்டனை நிறுத்தி வைத்ததால் திருக்கோவிலூர சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி மீண்டும் தொடர்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து செய்து வைக்குமாறு தமிழக முதலமைச்சர் தமிழக ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். 

தமிழக முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். இதனால் பொன்முடியின் பதவிப்பிரமாணம் தள்ளிப்போனது.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரை கடிதத்திற்கு தமிழக ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துள்ளார். முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளதே தவிர குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.

ஆனால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க இயலாது" என பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi refused MKStalin request for ponmudi otta


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->