வளமான தமிழ் கலாசாரம், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும் என கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து..!
Governor RN Ravi wishes everyone a happy Tamil New Year
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளை 14 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அனைவர்க்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்ப் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்.
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். அமிர்தகாலத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் 2047-க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும். என்று அவருடைய 'எக்ஸ்' தள பதிவில் அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Governor RN Ravi wishes everyone a happy Tamil New Year