ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம்?  வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தொடர்ந்துள்ள அந்த வழக்கில், "அரசு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றி தமிழக ஆளுநர் பேசி வருகிறார்.

மேலும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய பதவியான ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக உள்ள ஆளுநர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். எனவே, தமிழக ஆளுநரை பதவி நீக்க வேண்டும்" அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RNRavi against case ChennaiHC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->