குஜராத்தில் கெத்து காட்டும் பாஜக.. இமாச்சலில் இழுபறி.. தற்போதைய முன்னிலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், இமாச்சலில் ஆட்சியமைப்பதற்கு 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், இதில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று கருத்து கணிப்பில் கூட சொல்ல முடியவில்லை.

இரு தரப்பினரும் தீவிர செயலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கான ஒரு முடிவு இன்று தெரிய வரும். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் என 2 மாநிலங்களிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத் மாநிலத்தில் 140 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதேபோல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே கடும் போட்டி நிலவி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சம அளவில் முன்னிலை வகித்து வருவதால் யார் ஆட்சி பிடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குஜராத் முன்னிலை நிலவரம்;
மொத்த தொகுதிகள்-182
பாஜக-140
காங்கிரஸ் -30
ஆம் ஆத்மி கட்சி -5
மற்றவை-1

இமாச்சலப் பிரதேசம் முன்னிலை நிலவரம் ;
மொத்த தொகுதிகள் -68
பாஜக-34
காங்கிரஸ் -33
ஆம் ஆத்மி கட்சி -0
மற்றவை-3


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat and Himachal Pradesh assembly election results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->