குஜராத் முதலமைச்சர் யார்? பதவியேற்பு எப்போது? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில், 157 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

பாஜகவின் இந்த மாபெரும் வெற்றியை, குஜராத் முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை, தற்போது குஜராத் மாநிலத்தின் இந்த வெற்றி மூலம் பாஜக சமன் செய்துள்ளது. 

குஜராத்தில் மாபெரும் வெற்றியோடு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையில், குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் வரும் டிச.12ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Election 2022 Gujarat BJP CM


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->