குஜராத் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு முடிவுகள்!
Gujarat election 2022 opinion poll
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று, வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை டெல்லி, பஞ்சாப்பை போன்று குஜராத்திலும் ஆட்சியைப் பிடிப்பதற்கு உண்டான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி செய்துவருகிறது.
இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மீ கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 சதவீத எம்எல்ஏக்களை மட்டுமே பெரும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
கணிப்பு முடிவுகளின்படி பாஜக மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 135 முதல் 143 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 36 முதல் 44 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் :182
பாஜக : 135-143
காங்கிரஸ் : 36-44
ஆம் ஆத்மீ : 2
கடந்த 2017 தேர்தல் முடிவு :
பாஜக : 99
காங்கிரஸ் : 77
மற்றவை : 6
English Summary
Gujarat election 2022 opinion poll