எந்த சொத்தும் என்கிட்ட இல்லை, ரூ 233 கோடி கடன் இருக்கு! குஜராத் வேட்பாளர்களின் அடேங்கப்பா தகவல்! - Seithipunal
Seithipunal


ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தனியார் அமைப்பு, குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 1,621 பேரில் 456 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்களில் பாஜகவின் 154, காங்கிரசின் 142, ஆம்ஆத்மி கட்சியின் 68 வேட்பாளர்களும் அடங்குவார்கள்.

கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடத்தில் பாஜக வேட்பாளர் ஜெயந்தி படேலின் சொத்து மதிப்பு ரூ.661 கோடி. ரூ.233 கோடிக்கு கடன் உள்ளது. 

இரண்டாவது ரூ.372 கோடியுடன் பாஜக வேட்பாளர் பல்வந்த் ராஜ்புத், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித்சிங் தாக்குர் ரூ.342 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

6 பேர் தங்களிடம் எவ்வித சொத்துக்களும் இல்லை என்றும், 6 வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான அளவில் சொத்துகள் தங்களிடம் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். 

42 வேட்பாளர்கள் கல்வி அறிவே இல்லை என்றும், 85 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 449 வேட்பாளர்கள் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Election 2022 some Candidates info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->