#BigBreaking | குஜராத் தேர்தலில் புதிய விதிமுறை அமல் - அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு முறையான ஆப்பு! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அவரின் அந்த அறிவிப்புபடி, முதல்கட்ட வாக்குப்பதிவு - டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு- டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும். 

முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 14
முதல் கட்டம் வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 15
முதல் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 

இரண்டாம் கட்டம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 17
இரண்டாம் கட்ட வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 18
இரண்டாம் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 21

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க புதிதாக 3 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முக்கியமாக இந்த தேர்தலில் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை நிறுத்தியது ஏன் என அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Election 2022 rule


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->