ஒரு கும்பலை வைத்து ஆட்சி பிடிக்க முடியாது.. நடிகர் விஜய் குறித்து குருமூர்த்தி விமர்சனம்.!! - Seithipunal
Seithipunal


அரசியல் விமர்சகரும் பாஜக ஆதாரவாளருமான குருமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "விஜய் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சினிமா பற்றியே எனக்கு தெரியாத போது விஜய் பற்றி மட்டும் எனக்கு எப்படி தெரியும். தமிழ்நாட்டில் இனிமேல் சினிமாவிலிருந்து ஒரு அரசியல்வாதி பெரிய அளவில் வெற்றியடைய முடியும் என நான் நினைக்கவில்லை.

இது தவறாக கூட இருக்கலாம். ஆனால் அது போன்று நடக்கும் என எனக்கு தோன்றவில்லை. எம்ஜிஆர் ஒரு அரசியல் கட்சி அமைக்க காரணமே திமுகவில் 30 ஆண்டு காலமாக எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது. அவர்கள் திமுகவுடன் வேலை செய்து அரசியலில் அத்துபடி ஆனவர்கள். 

எனவே திமுகவிற்கு உள்ளேயே அதிமுக இருந்தது. அதனால் அவர் அதிமுகவை அமைக்கும் பொழுது அதிமுக தயாராக இருந்தது. இப்பொழுது நீங்கள் உங்கள் ரசிகர்களை எல்லாம் வைத்து கூட்டம் போட வேண்டும். இதே பிரச்சனை நடிகர் ரஜினிக்கும் இறந்தது.

ஒரு கூட்டத்தை ஒரு அமைப்பாக மாற்ற முடியாது. ஒரு கூட்டத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடியாது. பாட்னாவில் கூடிய கும்பல் கூட்டணியாக மாறுமா என்பது கேள்விக்குறி. 15 பேர் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்குவதே சந்தேகம் என்றால் 10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியை உருவாக்க எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியும்.

அதனால் இந்த முயற்சி எல்லாம் பெரிய அளவுக்கு வெற்றியடையாது. ஒரு கட்சி ஒரு கொள்கையின் அடிப்படையில் உருவாகி முன்னேறி வருவதற்கு 20, 30 ஆண்டுகள் ஆகும். திமுக,காங்கிரஸ், பாஜக காலம் எடுத்துக் கொண்டன. இவையெல்லாம் மனங்களை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்து ஒரு கட்சி உருவாகிறது. அதில் பல நிலைகளில் தலைவர்கள் உருவாகிறார்கள். இதெல்லாம் இல்லாமல் ஒரு கும்பலை வைத்துக் கொண்ட திடீரென ஆட்சியைப் பிடிக்கிறேன் என ஒருவர் சொல்கிறார் என்றால் ஏராளமான தன்னம்பிக்கை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்" என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gurumurthy criticizes actor Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->