திட்டமிட்டு சதிசெய்தது சோனியாகாந்தி தான்., பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பில் குளறுபடி மட்டும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட சதி தான் என்று, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எச்ச ராஜா தெரிவிக்கையில்,

"பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக மட்டும் சொல்ல முடியாது. இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தான் இந்த சதியை செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்ட ஒழுங்கை மணிலா பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தற்போது தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்., வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் திமுக அரசு படுதோல்வியை சந்தித்து விட்டது.

இன்றைய நிலைமையில் தேர்தல் நடத்தப்பட்டால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்பது உறுதி. முக்கிய காரணம், தற்போது பொங்கலுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களான குழம்பு புளியில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது.

மேலும், இந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து பொருள்களும் தரமற்ற வகையில் உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று ஹெச் ராஜா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H RAJA SAY ABOUT PM MODI PUNJAB ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->