சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன் தான் - ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு..!
h raja speech about caste based honour kills
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
"தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன் தான். சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர். சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை.

கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர். அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை.
திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன என்று தெரிவித்தார். பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
h raja speech about caste based honour kills