திமுக ஆட்சி மாற்றம் அல்ல ஏமாற்றம்., ரோட்டுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள்.! தமிழக அரசுக்கு ஒரே கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரக்கூடிய உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தற்போது இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 ரூபாயும், 75 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீண்ட காலமாக இந்த கோரிக்கையை முன்னிறுத்தி நடத்திவரும் மாற்றுத்திறனாளிகள், கடந்த ஆட்சியின்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நேரடியாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் புதுச்சேரியில் 3,500 ரூபாய் வழங்கப்படுவதாகவும், தெலுங்கானா மாநிலத்தில் 3016 ரூபாய் வழங்கப்படுவதாகவும், ஆந்திர மாநிலத்தில் மூவாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுவது நியாயம் தானா? என்று மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

handical protest against dmk govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->