அதிமுகவில் நடந்த தில்லு முல்லு...2 முக்கிய புள்ளிகளை கட்சியில் நீக்கிய எடப்பாடி!...நடந்தது என்ன?
Happened in AIADMK fraud Edappadi removed 2 important points in the party What happened
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது, அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த மக்களவை தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சம் பணம் வாங்கிய நிலையில், சீட் வாங்கி தரவில்லைன்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணத்தை திருப்பி கேட்டதால் மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னை தாக்கியதாகவும், மேலும் அதிமுக தலைமையிடத்தில் புகார் தெரிவித்ததால் பணம் தர முடியாத என மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். எனவே மாவட்ட செயலாளர் குமர குரு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் M. கிருஷ்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா (எ) N. சிவக்குமார், ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்றும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Happened in AIADMK fraud Edappadi removed 2 important points in the party What happened