நீதிமன்றத்தை மதிக்காத 30 இஸ்லாமிய மாணவிகள்., மீண்டும் விவகாரமாகும் ஹிஜாப் விவகாரம்.! - Seithipunal
Seithipunal


உயர்நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதிக்காமல், இஸ்லாமிய மாணவிகள் மீண்டும் ஹிஜாப் உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்து இருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் மதரீதியான உடைகளை அணியக் கூடாது என்று உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அம்மாநிலத்தின் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் தங்களுடைய ஹிஜாப் ஆடையை நீக்கி விட்டு, பின்னர் பள்ளிக்கு சென்றனர்.

இதுகுறித்து மாணவி ஒருவர் தெரிவிக்கையில், 'ஹிஜாப் அணியாமல் இருக்க வேண்டும் என்று பள்ளியில் தெரிவிக்கிறார்கள். ஆனால், அது என்னால் முடியாது. நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று ஷிவமோகா கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த 30 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டது.

மேலும் ஹிஜாபை அகற்றிவிட்டு கல்லூரிக்குள் வரலாம் என்று மாணவிகளுக்கு நிர்வாகம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்க மறுத்து மாணவிகள், கல்லூரி வகுப்பறையில் இருந்து வெளியேறி சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HIJAB ISSUE IN KARNATAKA FEB 16


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->