ஹிஜாப் வாக்காளர் - பாஜக முகவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
hijab madirai melur bjp
மதுரை மாவட்டம் : மேலூர் நகராட்சி எட்டாவது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் காந்திஜி பூங்கா ரோடு பகுதியை சேர்ந்த மக்களும், பார்கி தெருவை சேர்ந்த மக்களும், பெரியகருப்பன் காலனி பகுதியை சேர்ந்த மக்களும் வாக்களித்து வருகின்றனர்
இந்த வார்டை பொருத்தவரை பாஜக, தேமுதிக, திமுக, அதிமுக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நடைபெற்றுவந்த நிலையில், ஹிஜாப் அணிந்துவந்த பெண்ணுடன் பாஜக முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இது குறித்த வெளியான தகவலின்படி, ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளர் ஒருவருக்கும், பாஜக முகவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாஜக முகவரிக்கு எதிராக மற்ற கட்சி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒரு பெண் முகவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரை மேலூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்காளர் உடன், பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என்றும், அந்த அறிக்கையில் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.