இமாச்சலப் பிரதேச தேர்தல் : பாஜகவுக்கு முதல் வெற்றி.. முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வெற்றி.!
Himachal pardesh assembly election CM Jairam Thakur won
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், இமாச்சலில் ஆட்சியமைப்பதற்கு 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், இதில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று கருத்து கணிப்பில் கூட சொல்ல முடியவில்லை.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி குஜராத் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சரி சம அளவில் கடும் போட்டியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பாஜக சார்பில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஜெய்ராம் தாக்கூர் தொடர்ந்து 6வது முறையாக தனது சட்டமன்ற தொகுதியான செராஜில் 20,000 வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் முன்னிலை நிலவரம்;
மொத்த தொகுதிகள்-182
பாஜக-151
காங்கிரஸ் -19
ஆம் ஆத்மி கட்சி -7
மற்றவை-5
இமாச்சலப் பிரதேசம் முன்னிலை நிலவரம் ;
மொத்த தொகுதிகள் -68
பாஜக-27
காங்கிரஸ் -38
ஆம் ஆத்மி கட்சி -0
மற்றவை-3
English Summary
Himachal pardesh assembly election CM Jairam Thakur won