"இந்து அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக்கூடாது" என்ற விளம்பர பலகை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த வாதம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அவரின் அந்த மனுவில், "கடந்த ஆயிரத்து 1947 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து கோவில்களில், இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதி இல்லை என்ற சட்டத்துக்கு எதிராக, கடந்த 1970ஆம் ஆண்டு, இந்துக்கள் அல்லாத வரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் 1972 ஆம் ஆண்டு ரத்து செய்தது. ஆனால் அதன்பிறகும் பிற மதத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, 'இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை' என்ற விளம்பர பலகையை கோவிலின் நுழைவாயிலில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அவர்களது பாரம்பரிய ஆடைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணை வந்தபோது நீதிபதிகள், "பல கோவில்களில் ஒரு உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. மதசார்பற்ற நாட்டில் ஹிஜாப், கோவில் வேஷ்டி கட்டி வர வேண்டும் என்பதற்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா? என்ற கேள்வி எழுப்பினார். மேலும், அநாகரீகமாக உடை அணிந்து வருவதாக புகார் எதுவும் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேஷ்டி தான் அணிய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என்று என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், "தற்போது அது சம்பந்தமான ஆதாரங்கள் இல்லை. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்கையில், "கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பென்ச் ரத்து செய்துவிட்டது.

பல இந்துக் கோவில்களில், "இந்து அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக்கூடாது" என்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவில் மற்றும் சில தென்மாவட்ட கோவில்களில் ஆண் பக்தர்கள் மேலாடை அணியக்கூடாது என்ற ஆடை கட்டுப்பாடு தற்போது வரை அமலில் உள்ளது.

ஆனால், உயர்நீதிமன்றம் இதில் எந்த ஆடை கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இந்து அல்லாதோர் கொடிமரத்தை தாண்டி கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு, இன்னும் பல கோவில்களில் அமலில் இருந்து வருகிறது" என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து, "மதசார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடாது. இது மத ரீதியாக நாட்டை பிளவு படுத்துவது போன்றது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  மேலும், இந்த மனுதாரரின் மனு குறித்து இரு வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று, உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindu temple issue chennai hc hearing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->