நகராட்சி தேர்தலில் அதிமுகவின் கொங்கு கோட்டை தகர்ந்தது இப்படி தான்.?! பரிதாபத்தில் எம்.எல்.ஏக்கள்.!
how admk lost kondu belt
அதிமுகவின் இரும்புக் கோட்டையாக எப்பொழுதும் இருப்பது கொங்குமண்டலம். ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இந்த மாவட்டங்களில் கூட திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது., அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன், வேலுமணி மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகியோர் ஏற்கனவே ஆட்சியில் இருந்தபொழுது, உள்ளாட்சி துறை, மின்சாரத் துறை, டாஸ்மாக், போக்குவரத்து துறை, பள்ளிக் கல்வி என்று முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.
கோவை, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை நடத்தினர். இதன் காரணமாக தான் சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது திமுக தமிழகம் முழுதும் கைப்பற்றிய போதும், கொங்கு மண்டலம் அவர்களுக்கு சவாலாக இருந்தது.
10 தொகுதிகளில் திமுக தோற்றது. ஆனால், தற்போதைய மாநகராட்சி தேர்தலில் 95 சதவீத பதவிகளை திமுக கைப்பற்றி இருக்கிறது. இதற்கு காரணம் பொதுமக்களிடம் ஆளும் கட்சி பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாரி இறைத்துள்ளது. இது செந்தில் பாலாஜி வகுத்த வியூகத்தின் பலன் தான் என்று கூறப்படுகிறது.
அத்துடன் அதிமுகவினர் கட்சி பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதால், கொங்கு மண்டல பகுதியில் உள்ள தொகுதி மக்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததும்,மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததால் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் தொகுதியில் ஏதாவது நல்லது நடக்கும் என்ற நிலை ஏற்பட்டு அவர்கள் வாக்ளித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவின் 9 எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மட்டும் சமீபகாலமாக தொகுதி பிரச்சனைகளை கணக்கில்கொண்டு சட்டசபையில் பேசி கோரிக்கைகளை வைத்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களை திமுகவினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் தொகுதியில் பணிகள் துவங்கப்படும் என்று நடுநிலை வாக்காளர்கள் நினைத்துள்ளனர். இனிவரும் நாட்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், இந்த கோட்டை தகர்ந்து விடும் என்று கூறப்படுகிறது.