சாதி பெயரை சொல்லாம் எப்படி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது? அதற்கான பார்முலா ராகுல் சொல்லவேண்டும் - ஹிமாந்தா பிஸ்வா சர்மா! - Seithipunal
Seithipunal


ஜாதி பெயரை வெளிப்படுத்தாமல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மழைகால கூட்டத்தொடரில் நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுனார். அதற்கு பாஜக எம்பி அனுராக் தாக்கூர் ராகுலின் ஜாதி குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இது குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது குறித்து தெரிவித்ததாவது,  ஒருவருடைய சொந்த ஜாதியை வெளிப்படுத்தாமல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஃபார்முலாவை நாங்கள் ராகுல் காந்தி இடம் கேட்க விரும்புகிறோம். இதற்கான ஃபார்முலாவை ராகுல் காந்தி தெரியப்படுத்த வேண்டும்.

பீகார் அரசு அதிகாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. இது நாடு முழுவதும் நடத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா என்பது வேறு விஷயம். ஆனால் ஜாதி பெயரை வெளிபடுத்தாமல் எப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது சாத்தியம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to conduct caste wise census Rahul should say the formula for that Himanta Biswa Sharma


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->